Sunday, January 18, 2009

வேலை

சேகர் அந்த தி.நகரில் இருக்கும் ஜவுளி கடைக்கு வேலை கேட்டுச்சென்றான். கடை முதலாளியோ வேலை எதுவும் இப்போது காலி இல்லை என்று சொல்லிவிட்டார். சேகர் விடுவதாய் இல்லை, கடைக்கு முன் நின்று

"நல்ல தரமான துணிகள் இங்கு கிடைக்குமம்மா"
"ஒரு தரம் வந்து பாருங்கள்"

என்று தெருவில் வருவோர் போவோரிடம் சொல்ல ஆரம்பித்தான். கடை முதலாளி அவனை பார்த்தார். அந்த பார்வையே சொல்லியது அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று.

உறவுகள் இனிக்க

தவறு என்றால் ஒத்துக்கொள்
சரி என்றால் பொத்திக்கொள்

(நன்றி: Ogden Nash)

என்ன கொடுமை

மொட்டை மாடியில் தூங்க கூடாதாம்
பக்கத்து கட்டிடத்தில்
மகளிர் விடுதி புதிதாய்.

(இந்த கால) பெற்றோர்கள்

தாங்கள் வாழ்ந்து முடிக்காத
வாழ்க்கையின் எச்சங்களை
தங்களின் குழந்தைகளை
கொண்டாவது வாழ
துடிப்பவர்கள்.

அன்பு

அன்பு காட்டினால்
பிரிந்து விடுகிறார்கள்
என்கிறாய் நீ ...
என்றோ காட்டிய அன்பினால்
பிரிய மனமில்லை
என்கிறேன் நான் ...