Thursday, February 26, 2009

பின் பனிக்கால இரவு


மார்கழி முடிந்த இரவுவொன்றில் சென்னைலிருந்து பெங்களுருக்கு செல்வதற்காக சென்ரல்லில் இரயில் ஏறினேன். வார நாள் ஆகையால் கூட்டம் அதிகமாக இல்லை. இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்தேன். படங்களில் மட்டும்தான் அழகிய பெண் இரயில் ஏறுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்று... ஆமாம், சினேகாவை போல் ஒருத்தி என் முன் இருக்கைக்கு வந்தாள்.

அவள் கண்களில் மட்டும் ஒருவித சோகத்தை பார்க்க முடிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் இரயில் கிளம்பி வேகமெடுத்தது. நானும் கொண்டுவந்து இருந்த "The monk who sold his Ferrari" முழ்கினேன். வந்தவளின் விசுபல் அவ்வபோது என் கவனத்தை கலைத்தது. கடைசியாய் படிக்கும் புத்தகம் ஆதலால் சிரமப்பட்டு படித்துமுடித்தேன்.

நடுநிசியில் கதவை நோக்கி நடந்தேன், அவளோ ஓடும் இரயிலில் குதிக்க முயன்றுகொண்டிருந்தாள். அவள் கையை பிடித்து இரயிலின் உள்ளிழுத்து ஒரு முறைத்தேன். அழுதுகொண்டே அவள் இருக்கைக்கு சென்றுவிட்டாள்.

அவளாக பேசட்டும் நானும் என் இருக்கைக்கு சென்றேன்.
அரை மணி நேரம் மவுனமாய் சென்றது. அவளாகவே பேச ஆரம்பித்தாள்,

அவனுக்கு இன்று திருமணம், இரண்டு வருட காதல் ...
ஒரு மாதத்தில் எல்லாம் மாறிவிட்டது.

நான் அவளை பேசிவிட்டேன்.

பேசினால், பேசிக்கொண்டே இருந்தாள்.

அவனை
எங்கே பார்த்தாள்
எப்படி பழக்கமானது
எப்படி பிரிந்தது
என்று அனைத்தையும்!

நான் ஆரபித்தேன்.

வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைக்கெல்லாம் மரணம் தான் முடிவு என்றால் உலகத்தில் பாதி பேர் இறக்க வேண்டியதுதான் (yes same old movie டயலாக்!)
....
....

கால ஓட்டத்தில் திரும்பி பார்க்கும் போது
வெற்றி கொண்டதாய் இறுமாந்திருந்த
(சில) தருணங்களில் தோற்று இருப்போம்
தோல்வி கொண்டதாய் துவண்ட
(சில) தருணங்களில் வென்று இருப்போம்

வாழ்கையில்
பெற்ற ஒவ்வொன்றுக்கும்
ஒன்றை இழந்திருப்போம்
இழந்த ஒவ்வொன்றுக்கும்
ஒன்றை பெற்றிருப்போம்

அவன் இழப்பும் ஈடுசெய்யப்படும்

....
....

நான் என் அறிவுரையை முடிப்பதற்குள் பெங்களுரே வந்துவிட்டது.
அவளின் கண்களில் தெளிவை கண்டேன். இறங்கும் முன் அவள், diary கொடுத்து மொபைல் நம்பர், மெயில் ID எழுத சொன்னாள். எழுதினேன்.

இரயில் பெங்களூரில் நின்றது. "Thank you very much!" என்று சொல்லி விடைபெற்றாள் இன்று மலர்ந்த மலராய்.

நான் கடவுளுக்கும், அவளுக்கும் மனதார நன்றி சொன்னேன்.
அவள் மட்டும் இல்லாமல் இருந்தாள் நானும் குதித்திருப்பேன் அவள் சொன்ன அதே காரணத்துக்காக!