சென்னை: இன்டர்நெட் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சென்னையில் சிறப்பு ஆய்வரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி குரோம்பேட்டையில் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) மாலை 3 மணிக்கு இக் கூட்டம் நடக்கிறது.
இதில் ஆங்கில விக்கிப்பீடியா குறித்தும், பத்தாண்டு நிறைவு விழா குறித்து 'விக்கியர்' ஒருவர் பேசுவார். மாகிர், பரிதிமதி ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியா, விக்கி செய்திகள் குறித்துப் பேசுவார்.
தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த விக்கிப் பயனர்கள், அவர்களின் பங்களிப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.
இதையடுத்து பொதுவான உரையாடல்கள் நடக்கும்.
பின்னர் தேனி சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப்படும்.
இதைத் தொடர்ந்து ஜிம்மி வேல்சுடன் ஒர் இணைய உரையாடல் நடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்.com
2 months ago